திமுகவின் விழுப்புரம் நகர செயலர் செல்வராஜ் இன்று மர்ம நபர்களால்
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக
அதிகாலையில் வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட்டு ஸ்கெட்ச்
போட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
திமுகவில் தா. கிருட்டிணன், ஆலடி அருணா, கே.என்.நேருவின் தம்பி
ராமஜெயம் என ஒரு பட்டியலே உள்ளது. இதில் ராமஜெயத்தை படுகொலை செய்தது யார்
என்பது பல ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது திமுக விழுப்புரம் நகர செயலர் செல்வராஜூம் இதே பாணியில்
கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை வாக்கிங் சென்றபோது செல்வராஜ் ஆள்
நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்களால்
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் விழுப்புரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உட்கட்சி மோதலால் வெட்டி
கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment