தமிழக சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் இன்று மரணம் அடைந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார். தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அந்த தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து யார் நிற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அதிலும் குறிப்பாக திமுக யாரை நிறுத்தப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
சிம்லா முத்துசோழன் ஜெயலலிதா என்ற பெரிய சக்தியை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.கே. நகரில் நிறுத்தப்பட்டவர் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன். திமுக வழக்கறிஞர் அணியில் இருப்பவர்.
மாமியாரிடம் வாழ்த்து திமுக தன்னை வேட்பாளராக அறிவித்ததும் தனது மாமியாரிடம் ஆசி வாங்கிவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பினார் சிம்லா. பெரிய வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களில் ஸ்கூட்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தார்.
தோல்வி ஜெயலலிதா 96 ஆயிரத்து 269 வாக்குகள் பெற்று ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழனுக்கு 56 ஆயிரத்து 732 வாக்குகள் கிடைத்தது. இதன் மூலம், 39 ஆயிரத்து 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
சற்குண பாண்டியன் சிம்லா முத்துசோழன் போட்டியிட்டு தோல்வி அடைந்த அதே ஆர்.கே. நகர் தொகுதியில் 1989, 1996-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் சற்குண பாண்டியன். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.
No comments:
Post a Comment