Latest News

இந்தியாவின் கடைசிப் பதக்கக் கனவு தகர்ந்தது: யோகேஷ்வர் தத் தகுதிச் சுற்றில் தோல்வி



ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி தினமான இன்று நடந்த மல்யுத்த போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தோல்வி அடைந்தார். ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 120 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

சிந்து பி.வி. சிந்து பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமை அடைய வைத்துள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

சாக்ஷி மாலிக் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது.

கடைசி ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தியாவின் பதக்க கனவு இன்னும் நீடித்துள்ளது. இன்றைய போட்டிகளில் இரண்டில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

யோகேஷ்வர் ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் பங்கேற்றார். தகுதிச் சுற்றிலேயே அவர் மங்கோலியாவின் கன்சோரிஜின் மந்தக்நரனிடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தத் 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரத்தான் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் ராணுவத்தை சேர்ந்த கோபி தொன்னக்கல், கேதா ராம், நிதேந்திர சிங் ராவத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இன்றைய போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.