Latest News

பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல: கருணாநிதிக்கு வைகோ பதிலடி


பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல என திமுக -தேமுதிக கூட்டணி குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார் . தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இம்முறைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சமூகவலைதளங்களைப் பயன்படுத்த கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, மக்கள் நல கூட்டணி சார்பில் இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்கள் அறிமுக விழா சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

புதிய இணையதளம்... கூட்டணிக்கான இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்த உள்ளோம். இணையதளம் அறிமுக படுத்துவதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.மாற்று அரசியல்... இம்முறை இத்தேர்தலில் புதியதோர் மாற்று அரசியலை ஏற்படுத்த உள்ளோம். 22மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. 4வது கட்ட பயணம் தயாராகவிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கை... தேர்தல் அறிக்கை தயார் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.பாஜகவின் கோரமுகம்... பாஜகவின் கோரமுகம் வெளிப்பட்டதால்தான் அக்கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.பேர் விடுதலை தற்போது 7 பேர் விடுதலையில் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன. நாங்கள் தொடக்கத்தில் இருந்தே விடுதலை செய்யுங்கள் என்று கூறி வருகிறோம். மாநில அரசுக்கு விடுதலை செய்ய உரிமை உள்ளது.

கூட்டணி அழைப்பு... இதற்கிடையே, தே.மு.தி.க., த.மா.க ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். பட்டியலிட்ட 5 கட்சிகளைத் தவிர மற்ற எந்தக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்றார்.கருணாநிதிக்கு பதிலடி... மேலும், தேமுதிக - திமுக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைகோ கூறுகையில், ‘பழம் கணிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும். ஊழல் நஞ்சு கலந்த பாலில் விழக் கூடாது' எனத் தெரிவித்தார்.

என்ன சொன்னார் கருணாநிதி?... இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகதலைவர் கருணாநிதி,தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு,பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.முகவரிகள்... வைகோ இன்று அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணையதளம், பேஸ்புக், டிவிட்டர், யூ டியூப், இமெயில் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் வலைத்தள முகவரிகள் பின்வருமாறு:

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.