பள்ளி மாணவி மாயம்
ஆவடியை சேர்ந்த 16 வயது மாணவி, செங்குன்றத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். கடந்த 10–ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, அதன்பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுபற்றி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் மாயமான அந்த மாணவி, கடந்த 13–ந் தேதி வீட்டுக்கு திரும்பி வந்தார். தனது பெற்றோரிடம் அவர், ‘‘என்னை ஆவடி கன்னடபாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ஜெய்கணேஷ் (வயது 26) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி திருப்பதிக்கு கடத்தி சென்றார். திருப்பதி கோவிலில் எனக்கு தாலி கட்டி அங்கு அறை எடுத்து தங்க வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து அழைத்து வந்து ஆவடியில் விட்டுச் சென்று விட்டார்’’ என கூறினார்.
வாலிபர் கைது
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியகுமாரி வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்தி, கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜெய்கணேசை நேற்று கைது செய்தார்.
பின்னர் அவர், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மாணவியை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


No comments:
Post a Comment