தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதியன்று தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதியன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்வு அட்டவணைகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தும், விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment