Latest News



வாக்களித்த மக்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக அதிரைபிறை சார்பாக இணைதள வரலாற்றில் முதன் முறையாக நமது தளம் நேருக்கு நேர் (SPONCERED BY: GLOBAL STAR BUILDERS, EVERGOLD COMPLEX, BUS STAND, ADIRAI) எண்ணும் கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிரை சேர்மன் அஸ்லம் அ

வர்கள் கலந்துக்கொண்டு உங்கள் மக்களின் கேள்விகள், புகார்கள், விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். சரியாக 8 மணிக்கு துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மழை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாக துவங்கப்பட்டது.

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 95 நேயர்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டனர். இருப்பினும் நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பு 36 நேயர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இதில் மேலத்தெரு, கீழத்தெரு, ஹாஜா நகர், கடற்கரைத்தெரு, வாய்க்கால் தெரு, நடுத்தெரு, பழஞ்செட்டித்தெரு, கரையூர் தெரு, திலகர் தெரு, புதுத்தெரு, சி.எம்.பி.லேன், புதுமனைத்தெரு, ஆலடித்தெரு, சுரைக்காய் கொள்ளை, நெசவுத்தெரு, போஸ்ட் ஆபிஸ் ரோடு போன்ற பல பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்தனர்.

நமது அதிரை பிறை சார்பாக பல கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் அந்த கேள்விகளை கேட்ககூட வாசகர்கள் நேரமளிக்காத அளவுக்கு தொடர்ந்து நம்மை அழைத்தவாறே இருந்தனர். இது மக்களாகிய உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட

நிகழ்ச்சி. இதில் உங்களுக்கு தான் உரிமை. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அனைவருக்கும் நன்றி….

இந்த முழு நிகழ்ச்சிக்கான வீடியோ தொகுப்பு
நன்றி : அதிரை பிறை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.