சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரிட்ஜ், வாஷின் மிஷினை இலவசமாக அதுவும் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்யும் ஜெயக்குமாரின் செயல் நிச்சயம் பாராட்டிக்குரியது. சென்னையில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளில் தேங்கிய வெள்ளநீரில் மீன்கள் விளையாடியதுடன் பாம்புகளும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு சென்றன. சென்னையில் தற்போது தான் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு சக மக்கள் ஓடியோடி உதவி செய்வதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலையில் நிகில் முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பாதிக்கப் ட்டவர்களின் பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ரிப்பேர் இலவசமாகவும் உதிரிபாகத்திற்கு 40% கழிவும் கொடுத்து உங்கள் வீடு தேடி வந்து துயர் துடைக்கும் நல்ல மனிதர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சேவை பாராட்டுக்குரியது. இலவச - பிரிட்ஜ், வாஷிங் மிஷின் - ரிப்பேருக்கு தொடர்பு கொள்ளவும்: ஜெயக்குமார் 98656 74287. மற்ற நண்பர்கள் குரூபிற்கு இந்த தகவலை அனுப்பவும் ஜெயக்குமாரின் சேவையை நீங்களும் பாராட்டலாமே வாசகர்களே.

No comments:
Post a Comment