வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதியாக கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட தமிழகப் பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
இந்நிலையில், வெள்ள சேதம் குறித்த ஆய்விற்காக சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,940 கோடிகளை ஒதுக்கியதற்காக பிரதமர் மோடி மற்றும் அருண் ஜெட்லிக்கு ஜெயலலிதா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment