அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்ட செயலாளர்களுக்கு இணையான பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது உயர் மட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ். பொன்னையன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை நிலையச் செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். 1989ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அவருடைய மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டது. இருப்பினும் பின்னர் இரு பிரிவுகளும் இணைந்து கட்சி ஒன்று பட்டது. 1989ம் ஆண்டு இந்த இணைப்பு நடந்தது. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment