Latest News

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு : 813 காலியிடங்கள்


கிராம நிர்வாக அலுவலர்  பதவியில் உள்ள 813 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க 14.12.2015 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதன் கல்வித் தகுதி 12.11.2015 தேதியின்படி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.

வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.12.2015 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

01.07.2015 தேதியின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கான வயது 21- 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற தளத்திற்குள் செல்லவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.