கவிஞர்
அல்குர்ஆன் விரிவுரையாளர்
இஸ்லாமிய சட்ட வல்லுநர்
அரபி உருது ஆங்கிலம் பெங்காலி
பார்சி போன்ற மொழிகளிலும்......
கணிதம் உலக வரலாறு தத்துவம்
இதழியல் போன்ற துறைகளிலும்.....
தனித்திறன் பெற்ற பன்முக ஆளுமை
இந்திய விடுதலை போராட்ட தியாகி....
கிலாஃ பத் இயக்கத்தின் தலைவர்.....
இக்கட்டான விடுதலைப் போர் காலத்தில்
இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைமை
வகித்த இளம் தலைவர்......
குடியரசு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்....
IIT IIM UGC போன்ற உயர் கல்வி நிறுனங்களை
உருவாக்கி இந்திய கல்வி துறையை உலக தரத்திற்கு
உயர்த்திய கல்வியாளர்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையை
இந்திய கல்வி கொள்கையாக வடிவமைத்த சிற்பி
இன்னும் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர்
ஒவ்வொரு ஆண்டும்
நவ 11. அன்று தேசிய கல்வி தினமாக
கடைபிடித்து கல்வி நிறுவனங்களில் எழுத்து பேச்சு
போட்டிகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்த சொல்லி
மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்புவது வழக்கம்
வரலாற்றை மறைப்பதை வழக்கமாக
கொண்டுள்ளவர்களின் கையில் ஆட்சி சிக்கி
இருப்பதால் கடந்த ஆண்டு சுற்றறிக்கை
அனுப்பப்படவில்லை
ஆனாலும் தமிழகத்தின் பெரும் பகுதி கல்வி
நிறுவனங்களில் தேசிய கல்வி தினத்தை சிறப்பாக
கடைபிடிக்க சொல்லி விழிப்புணர்வு
ஏற்படுத்தினோம்.
உண்மையாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும்
பகுதிகளிலும்... அவர்களின் கல்வி நிறுவனங்களிலும்
தேசிய கல்வி தினம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது
அதேபோல இந்த ஆண்டும் நடைபெற
கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின்
பொறுப்பாளர்களின் கவனத்திற்கு இந்த செய்தியை
கொண்டு சென்று மௌலானா அவர்கள் ஆற்றிய
சேவையை இளைய தலைமுறையின் சிந்தனைக்கு
கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு .
இப்போதே வேலையை துவங்குவோம்.
இந்த செய்தியை முடிந்த வரை பகிரவும்.
***** CMN SALEEM
No comments:
Post a Comment