பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ஒரு ஆண்டில் ரூ.37 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில் முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ் திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், பிரதமரின் பயணச் செலவு குறித்து சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு இருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓராண்டு செலவு ரூ.37 கோடி ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அதில், ஒவ்வொரு நாடுகளுக்கும் அவர் சென்றபோது ஆன செலவு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எங்கே எவ்வளவு செலவு ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.
ஹோட்டல் செலவு பூடானுக்கு சென்ற போது தான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். நியூயார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம்.
கார் பயண வாடகை பிரதமர் மோடியுடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
சீனாவில் செலவு சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமரின் இன்டர்நெட் செலவு இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:
Post a Comment