கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 72 வயது கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ரனகாட்டில் உள்ள ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்டுக்குள் 6 பேர் புகுந்தனர். அதில் 4 பேர் கான்வென்ட்டில் இருந்த 72 வயது கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்தை சேதப்படுத்தி அங்கிருந்த ரூ.8 முதல் 9 லட்சத்துடன் தப்பியோடிவிட்டனர். கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த 4 பேரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவை போலீசார் வெளியிட்டனர். போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கயவர்கள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். கன்னியாஸ்திரி பாலத்காரம் செய்யப்பட்டது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கர் வாப்சி என்ற பெயரில் நடந்து வரும் மதம் தொடர்பான வெறிச் செயல் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்து அமைப்புகள் கர் வாப்சி என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இந்து மதத்திற்கு மாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment