பஜாஜ் நிருவனத்தின் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பைக்கான Pulsar 200 SS வரும் 2015ம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இந்த பைக்கின் தயாரிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அண்மையில் துருக்கியில் இந்த பைக் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு நிகழ்ந்த Delhi Auto Expoவில் காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்தே இந்த பைக்கின் மீது இந்திய இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்து விட்டது.
ஆறு கியர்கள் பொருந்திய கியர் பாக்ஸுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த Pulsar 200 SS, Pulsar NS200 மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் டிசைன் SS 400 பைக்கை கொண்டுள்ளது. இதன், அம்சங்கள் அனைத்து NS200ஐ போன்றே அமைந்துள்ளன. NS200ல் உள்ளதைப் போன்றே, இதிலும் பிளாஸிக்கால் ஆனsplatter guard மற்றும் fuel tankக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதே போல், இரட்டை projector ஹெட் லைட்டுகள், சிறிய side-slung exhaust புகைப்போக்கி, மற்றும் ஸ்ப்லிட் ஸீட் டிசைனும் அமைந்துள்ள இது கண்டிப்பாக அனைவரது கவணத்தையும் கவரும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த பைக்கின் ABS variantம் சலுகை அடிப்படையில் வெளிவர உள்ளதாம். அப்படி ABS உடன் வெளிவந்தால், இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ABS பைக் இது தான். 199.5cc திறன் கொண்ட இதன் விலை இந்தியாவில் தோராயமாக ரூ. 1 லட்சம். யமஹாவின் R15, KTM-ன் RC200 இவற்றின் வரிசையில் இதுவும் வரும் என்று பஜாஜ் நிருவனம் எதிர்பார்கிறது.
No comments:
Post a Comment