ஆசை’ திரைப்பட பாணியில் திருச்சியில் பெண் டாக்டர் ஒருவர் முகம் முழுவதும் பிளாஸ்டிக் டேப் ரோலால் சுற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குடியிருக்கும் சார்லஸ் என்பவரது மனைவி டாக்டர் ஜூலியட் மேரி. இவர் நெ.1 டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனையில் கடந்த 18 ஆண்டுகளாக டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கணவனை பிரிந்து வாழும் இவருக்கு ஜோஸ்வா என்கிற மகன் உள்ளார். இவர் பொறியியல் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
டாக்டர் ஜூலியட் வீட்டிலும் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மேல்வீட்டில் குடியிருக்கும் ரவிசங்கர், வீட்டு கதவை திறந்து பார்த்த போது முகத்தின் மீது தலையணை மூடிய நிலையில் போது இறந்து கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த ரவிசங்கர், சம்பவம் குறித்து சமயபுரம் நெ.1 டோல்கேட் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி டி.எஸ்.பி அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சிறுகனூர் மன்னர் மன்னன், சமயபுரம் மனோகரன் உள்ளிட்ட காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரை பிரிந்து டாக்டர் ஜூலியட் தனியாக வசித்து வருகிறார். யாரிடமும் விரோதம் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளது டாக்டர் மத்தியிலும், அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூங்கும் நிலையிலேயே வீட்டின் பெட் ரூமில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். ஆனால் ரத்த காயங்களே இல்லை.
ஜூலியட் மேரி தனியாக வசித்ததை நோட்டமிட்ட மர்மநபர் அவரை கொலை செய்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும், ஜூலியட் மேரி வீட்டிற்கு தெரிந்த நபர் தான் உள்ளே புகுந்திருக்க வேண்டும் என்றும், ஜூலியட் மேரியிடம் தகராறு செய்து அவரது முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்க வேண்டும் என்கிற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலி, இரண்டு கைகளிலும் அணிந்திருந்த வளையல்கள் இல்லை. மேலும் வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணவில்லை என்கின்றனர். எனவே இந்த கொலை நகை மற்றும் பணத்தினை திருடுவதற்காக கொலை நடந்திருக்குமோ என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசை திரைப்பட பாணியில் அரங்கேறியிருக்கும் இந்த கொலை திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment