ஜெயலலிதாவுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தாலும், தற்போது, அவர் முதல்வராக முடியாது என பெங்களூரு தனி நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இவ்வழக்கில் ஆஜராகியிருந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியதாவது, உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
2 மாதத்துக்குள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து தஸ்தாவேஜூகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் ரத்து செய்யவில்லை.
இதனால் தண்டனை அப்படியே உள்ளது. தற்போது ஜெயலலிதா முதல்வராக முடியாது. வழக்கு தொடர்ந்து நடக்கும். முடிவில் வரும் தீர்ப்புபடி, அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று
No comments:
Post a Comment