Latest News

ATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக்கைகள்!-கட்டாயம் படிங்க!


ஏ.டி.எம். – குற்ற‍ங்கள் – அதிர்ச்சிச் செய்திகள் – எச்சரிக்கைத் தகவல்கள்! (கட்டாயம் படிங்க)

ஏ.டி.எம். எச்சரிக்கைகள்!

ஏ.டி.எம். எனப்படும் Automated Telling Machine இப்பொழுது நகர ங்கள் மட்டுமல்லாது கிராமங்களி லும் புழக்கத்துக்கு வந்து விட்ட ன. அது போலவே ATM–களில் நடக்கு ம் தவறுகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றிலிருந்து நுகர்வோர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள,

சில வழிமுறைகளை இப்பொழுது பார்ப்போமா?

ஏ.டி.எம்-ல் நடத்தப்படும் குற்றங்கள்:-

* கார்டில் உள்ள பின் எண்ணையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள்வது.

* இ-மெயில்கள் அனுப்பி, கணக்கு வைத்திருப்பவரின் தகவல்களைத் தெரிந்து கொள்வது.

* ‘ஸ்கிம்மர்’ போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் உள்ள பணத்தை எடுப்பது.

நாம் கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

* எந்த வங்கியில் இருந்து ஏ.டி.எம். அட்டை வாங்கப்பட்டதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம்-ஐ கூடிய வரை பயன்படுத்துங்கள்.

* பின் நம்பர் என்பது Personal Identification Number ஐ குறிக்கும். இந்த எண்ணை கீ-போர்டில் அழுத் தும் போது யாரும் பார்க்காமல் கீ-போர்டு மறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

* ஏ.டி.எம்.க்குள் வங்கிகள் அமைத் திருக்கும் ‘கேமராக்கள்’ மூலம் இந்த தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வேறு நபர்களாலும் இத்தகைய கேமராக்கள் பொருத்த வாய்ப்பு உள்ளது.

* பணம் எடுத்தவுடன் நீங்கள் எடுத்த தொகை, உங்கள் கணக்கில் மீதம் உள்ள தொகையை வெளியேறும் சீட்டு மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

* பணம் எடுத்த பின், திரையில் கூறியுள்ள அறிவுரைகளின் படி, உங்கள் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ‘கார்டை’ வெளியே எடுக்க மறக்காதீர்கள் ஏ.டி.எம்.ஐ விட்டு வெளியே வரும் போது உங்கள் பர்ஸ், மொபைல் ஃபோன் போன்றவற்றை மறந்து விட்டு விடாதீர்கள்.

* உங்கள் ‘கார்டு’ இயந்திரத்திற்குள் வேகமாக உள்ளே இழுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

* நடவடிக்கைகள் முடிந்த உடனேயே உங்கள் கார்டை வெளியே எடுத்து விட வேண்டும் (அதிக பட்சம் 30 விநாடிக்களுக்குள்)

* உங்கள் பின் எண்ணை உங்கள் டயரி மற்றும் வேறு புத்தகங்களில் எழுதி வைக்காதீர்கள். எண்களைத் தவறாக அழுத்தினால், உடனே ” Cancel” என்ற பட்டனை அழுத்தவும்.

* ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் எழுதப்பட்டு இருக்கும். உங்கள் புகாரை உடனே அந்தத் தொலை பேசி எண்ணுக்குத் தெரியப்படுத்தவும்.

* ஏ.டி.எம். தொடர்பான குறைகளை, நுகர்வோர் தெரிவித்தால் 7நாட்களுக்குள் குறைதீர்க்கப்பட வேண்டும் என்பது ரிஸர்வங்கியின் அறிவுரை. இவ்வாறு தீர்க்கப் படாவிட்டால் ஒருநாளைக்கு ரூ. 100 மீதம் இழப்பீடு தரப்படவேண்டும்.

* மேலும் ஆர்.பி.ஐ. உத்தரவின்படி, நுகர்வோரின் பெயர், கணக்கு எண், கார்ட் எண், ஏ.டி.எம். முகவரி, வங்கியின் பெயர், புகாரின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய புகார் படிவங்கள் ஒவ்வொரு ஏ.டி. எம்.லும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.