தில்லியில் 6 ஆண்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி, தமிழகத்தில் ஒரு ஆணால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி, பாண்டிச்சேரியில் ஆசிட் வீசி முகம் மற்றும் உடல் அங்கங்கள் கருகிய வினிதா என்ற பெண் இவர்கள் அனைவரும் ஆண்களால் சூறையாடப்பட்டவர்கள்.
தில்லிப் பெண்னோ தானாக வலையில் சிக்கியது போல் [ லிஃப்ட் கேட்டு பஸ் ஏறியவள் ] மாட்டிக்கொண்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவள், தமிழகப் பெண்னோ காமக்கொடுரனால் பாழடிக்கப்பட்டவள், பாண்டிச்சேரி வினோதினி தனக்கு தெரிந்த ஒரு ஆணால் காதலை மறுத்ததின் விளைவால் ஆசிட் வீசி துன்புறுத்தப்பட்டவள் இவைகளுக்கான காரணங்கள் எதுவானாலும் பாதிக்கப்பட்டது பெண்னே ! பாதிப்பை ஏற்படுத்தியது ஆண் ?
மின்சாரமென்பது அபாயகரமானது அபாயகரத்தை அனைவரும் ஆதரிக்கின்றோம் ஆனால் தக்க பாதுகாப்போடு ஒரு பெண் வெளியில் செல்லும் பொழுது இன்சுலேட் செய்யப்பட்ட மின்சாரக்கம்பி எவ்வாறோ அவ்வாறே தன்னுடைய ஆடை அலங்காரத்தில் அக்கறை காட்டாது பெண்னின் அங்கம் மின்சாரத்திற்குச் சமம்.
இன்சுலேட் என்பது மின்சாரத்திற்கு மட்டுமல்ல பெண்ணிற்கும் அவசியம் வெளியில் செல்லும் பொழுது உடலை கவர் செய்வதில் பெண் அக்கறைக் காட்டுதல் வேண்டும். அடுத்தது வேளைக்கு போகும் பெண்கள் தம் சக தொழிலாளி அல்லது ஆண் நண்பர்கள் இவர்களிடம் பழகும் பொழுது [ தம்முடைய குணாதிஸயங்கள் எப்படியிருந்தாலும் ] சிடு மூஞ்சித்தனமாக இருப்பதே பெண்னிற்கு பாதுகாப்பு.
அடுத்தது வேளைக்கு சென்ற பெண்கள் இரவு 7 மணிக்குள் வீடு திரும்புவது அவசியம் அப்படிப்பட்ட வேளையை தேர்ந்தெடுத்துக் கொள்வது மிக அவசியம்
ஆண்களுக்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதும் சம உரிமை இருக்கின்றன என்றாலும் இயற்கையாக பெண் சில விஷயங்களில் ஆணைச் சார்ந்து இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.
பெண் என்பவள் தாய் ! தாய் என்பவள் ஆணைப் பெற்றவள் !!
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்கிறது அல் குரான்.
தாயினும் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது இந்து மதம் !
அராஜகம் செய்யும் ஆண்களே தான் சார்ந்திருக்கின்ற ஆண் சரியில்லாததின் காரணம் கொண்டு எத்தனையோ பெண்கள் வேளைக்கு செல்கின்றனர் தம்முடைய வர்க்கம்[ ஆண் ] சரியில்லாததுதானே பெண்கள் வேளைக்கு போகின்றார்கள் ஆகையால் இனி அப்பெண்ணுக்கு நாம்தான் பாதுகாப்பளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment