தமிழக அரசு பல சலுகைகளையும், திட்டங்களையும் சிறுபான்மையினருக்கு என்று அறிவித்து அதை சிறுபான்மையினர் நலத்துறை மூலமாகவும், பிற்பட்டோர் நலத்துறை மூலமாகவும் நடைமுறை படுத்தி வருகின்றது. ஆனால் அதனை முஸ்லிம்கள் சரிவர பயன்படுத்தாமலும், அதனை பற்றிய விழிப்புனர்வும் இல்லாமலும் இருக்கின்றனர். குறிப்பாக தமிழக அரசு கல்வி தொடர்பாக பல சலுகைகளை மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினர் என்ற சலுகைகள் மட்டும் அல்லாமல், தமிழக மக்களுக்கு என்று பொதுவான சலுகைகளையும் அவர்களின் பொருளாதார அடிப்படைகளை வைத்தும், முதுமை(சீனியர் சிட்டிசன்), மற்றும் பெண்களுக்கு என்று ஏழை பெண்கள் திருமண உதவி திட்டங்கள், கற்பினி பெண்கள் திட்டம், விதவை மறுவாழ்வு திட்டங்கள் என்றும் பலவிதமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது. இது போன்ற திட்டங்களை முஸ்லிம்கள் பயன்படுத்தி கொள்வதே இல்லை!...
அவ்வாறு பயன்படுத்தினாலும் அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவே!. எனவே நம் வரி பணத்தின் மூலம் தீட்டப்படும் இது போன்ற திட்டங்களை நம் முஸ்லிம் மக்களுக்கு எடுத்து சொல்லி, தகுதி உள்ளவர்களை இத்திட்டங்களின் மூலம் பயன் அடைய, நம்மால் ஆன உதவிகளை முஸ்லிம் சகோதரர்கள் செய்ய முன்வர வேண்டும்.
தமிழக அரசால் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்படும் சில திட்டங்களை தமிழக அரசின் இணையதளத்தின் http://www.tn.gov.in/tamiltngov/index.html மூலம், சில வற்றை பதிவிறக்கம் செய்து உங்களின் பார்வைக்கு தருகின்றேன். கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து, அதில் உள்ள திட்டங்களை தகுதியானோருக்கு சென்றடைய வழிவகை செய்யுங்கள்!.
தமிழக அரசின் சிறுபான்மை மற்றும் பிற்பட்டோருக்கான நல திட்டங்கள் (PDF Format)
No comments:
Post a Comment