Latest News

நோயாளியை தீர்க்கும் மெடிக்கல் பில்.


கடந்த 20 வருடங்களை ஒப்பிடும்போது மருத்துவத்துறையின் வளர்ச்சி சிறந்தமுறையிலேயே பதிவாகியிருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசி மருந்து மாத்திரைகளின் விலையை ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் எட்டாத நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. [ இப்படியெல்லாம் எழுதினால் தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தில் எழுதும் ஸ்டைலில் இருக்கும்..சரி நமது வழக்கத்துக்கு வருவோம்]

இப்போதெல்லாம் -மெயில் பார்வேர்டு செய்வதற்கென்றே பிறப்பெடுத்து வந்ததுபோல் சில ஆட்கள் தினம் -மெயில் அனுப்புகிறார்கள். சில விசயங்கள் பிரயோஜனமானது..பெரும்பாலான மருத்துவ விசயங்கள் Not Clinically proven.

இதில் செயின் இமெயில் வேறு...பள்ளிவாசலில் தூங்கினார் / கனவு வந்தது / -மெயிலை மற்ற 10 பேருக்கு அனுப்பாவிட்டால் உனக்கு கல்யாணம் ஆகாது [ ஆகா எவ்வளவு நல்ல விசயம்!!!] உனக்கு நிறைய லாபம் விளைச்சலில் கிடைக்கும்..[ இருப்பதோ ஹவுசிங் ஏரியா..இங்கே போய் நாத்து எப்டிபா நட முடியும்?] சரி மறுபடியும் விசயத்துக்கு வருவோம்...இப்பொது உள்ள சூழலில் டாக்டரிடம் டிஸ்கவுன்ட் கேட்கலாம் ஆனால் மருந்து மத்திரைகள் 300- 400% விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. நம் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள் , அவர்களுக்கும் வயதான காலத்தில் மருத்துவ செலவு தவிர்க்க முடியாதது....

நமக்கும் வயதாகும், நமக்கும் ஏற்படும் செலவுகளை எப்படி செலவு செய்ய போகிறோம்??. இது இப்போது உள்ள எல்லாருக்கமான கேள்வி. இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கான கேள்வி.

நமது குடும்ப முறைகளின் [அல்லது முறைகேடுகளின்] அவலம் என்ன தெரியுமா? யார் அந்த குடும்பத்தில் அதிகம் சம்பாதிக்கிறானோ அல்லது சம்பாதிப்பது மாதிரி வெளியில் தெரிகிறதோ அவன் ஒரு நிறந்தர பலிகடா.

நீந்தானே செய்யனும்...னு உசுப்பேத்தவே சில ஆட்கள் எப்போதும் கோரஸ் பாடிக்கொண்டே இருக்கும். அவனுக்கு பிரச்சினை என்று வந்து விட்டால் மாயஜால படங்களில் வருகிறமாதிரி [ புகை மிஸ்ஸிங்] காணாமல் போய்விடுவார்கள். இல்லாவிட்டால் அவன் சம்பாதிக்கிறான்ல கொடுக்கட்டுமே என்று வெளியிலும், உன் மனசுக்கு கொடிகட்டி வாழ்வாய் என டயலாக் ரெடியாக ப்ராம்ப்ட் செய்வார்கள். அவன் கொஞ்சம் சிரமப்பட்டாலும் " அவன் முந்தி மாதிரி இல்லே...இப்போ அப்டியெல்லாம் இருக்க முடியுமா" என அதே ஆட்கள் சொல்வது நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.

இப்போது உள்ள சூழலில் டெலிவிசனிலேயே மருத்துவ செலவு எவ்வளவு வரும் என்பதை ஒரு டேக் லைன் விளம்பரமாக செய்து விடுகிறார்கள். சில எமர்ஜென்ஸி நேரங்களில் தொடர்ந்து செய்யப்படும் மருத்துவம் பயனளிக்கும் என தெரிந்தும் நோயாளியை கொண்டு வந்து சேர்த்த உறவினர்களால் அந்த பணத்தை கொடுக்க முடியாது என தெரிந்து எத்தனையோ ஆக்ஸிஜன் சிலின்டர்களின் மருத்துவ மனைகளால் வாய் மூடப்பட்டிருக்கிறது. நல்ல படியாக வாழ்ந்தவர்கள் பணம் இல்லை என்ற காரணத்தால மருத்துவம் மறுக்கப்பட்டு வெளியில் மெடிக்கல் பில்லுக்கு கையேந்த வெட்கப்பட்டு உயிரை விட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நோயாளி இறப்பது இயற்கை, ஆனால் அவன் அவனுடைய கனவுகளையும் கடமைகளையும் சேர்த்து சாகடிப்பது எந்த விதத்தில் ஞாயம்.

சரி இதற்கு தீர்வுதான் என்ன? உங்கள் குடும்பங்களில் எத்தனை பேர் சம்பாதிக்கிறீர்கள், இப்போது கணக்கெடுத்தால் கூட ஒரு 10 பேராவது தேறுமா? எல்லோருக்கும் தெரிவித்து மாதா மாதம் ஒரு சேமிப்பு மாதிரி ஆரம்பியுங்கள், சிலர் மாதம் 5000 சம்பாதிக்களாம் சிலர் மாதம் 100,000 சம்பாதிக்களாம் இதில் மனம் உவந்து எவ்வளவு அவர்களுடைய பணம் தந்தாலும் முறைப்படி கணக்கு வைத்துக்கொண்டு குடும்ப உறுப்பைனர்கள் யாரும் மருத்துவ மனையில் அட்மிட் ஆகும்போது மட்டும் இதை பயன் படுத்தினால் 'ஒரு காலத்திலே நல்லா இருந்த குடும்பம்' எனும் வசனம் தவிர்க்கலாம். இனிமேலாவது இனிசியலை வைத்து, குடும்ப பெரியவர்களின் பெயரை உங்கள் குடும்பத்துக்கு வைத்து பெருமைப்படும் நீங்கள் உங்கள் ஒற்றுமையை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டுங்கள்.
ஒரு சின்ன அஷைன்மென்ட் இன்று தூங்குமுன் ஒரு சின்ன கணக்கு எடுங்கள் "இப்படி ஒரு எமர்ஜென்ஸி மெடிக்கல் ஃபன்ட்' உங்கள் குடும்பத்தில் போன வருடம் ஆரம்பித்து இருந்தால் இதுவரை அதன் இருப்பு குறைந்த பட்சம் Rs 200,000/= த்தை தாண்டி இருக்கும்.

இதை நிர்வகிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் , "அந்த பணத்திலே ஒரு ஐம்பதாயிரம் கொடு [ என் மவனும் அனுப்புரான்ல!!] இன்னும் 5 நால்ல பணம் வந்தவுடனே தந்துடுறேன்''னு காக்கையின் குறல் ஸ்ரேயா கோசல் குரல் மாதிரி என சொன்ன நரி மாதிரி குடும்பத்திலேயே ஆட்கள் இருக்கும், பணத்தை கொடுத்த பிறகு ' வடெ போச்சே' என வருத்தப்பட்டு புண்ணியம் இல்லை.

பொறுப்பை ஊட்ட தாமதிக்கும் ஒவ்வொரு நிமிசமும் மற்றொருவனின் முதுகில் அந்த பொறுப்பு ஏற்றப்படுகிறது.

பணம்............ உலகம் ஏற்படுத்திய பல நோய்களுக்கான ஒரே நிவாரணி.

ZAKIR HUSSAIN
நன்றி : அதிரைநிறுபர்
தகவல் அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.