கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபக்கம் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு பெற்றோர்கள் இல்லாத நிலையில், சிறுமியின் பெரியப்பா முறை கொண்ட பிச்சைமுத்து என்பவன், சிறுமியை வளர்த்து வந்துள்ளார்.
சிறுமி அங்குள்ள பகுதியில் பத்தாம் வகுப்பு பயின்று வரவே, சிறுமி 3 மாத கர்பிணியாகியுள்ளார். மேலும், கருவை கலைக்க அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் வாகை வைத்து, அவருக்கு அதிகளவு வயதாகவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் சிறுமியிடம் வயதை கேட்கையில், தனது வயது 16 என்று கூறவே, காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவலை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சிறுபாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சிறுமி அவரது தோழியின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், சிறுமியின் தோழியுடைய சகோதரர் வெற்றிவேல் (வயது 29) பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனை அறிந்த வளர்ப்பு தந்தை பிச்சைமுத்துவும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

No comments:
Post a Comment