 
                
உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் 
ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி 
உள்ளார். குற்றச்சாட்டு நகலையும் 22 நீதிபதிகளுக்கு அவர் அனுப்பி உள்ளார். 
இந்த நிலையில் இந்த புகார் கோகோய் அடங்கிய 3 பேர் அமர்வு முன் அவசர 
விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதித்துறை மிகப்பெரிய மிரட்டலுக்கு 
உள்ளாகியிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை மூத்த நீதிபதிகள் 
அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று கோகோய் தெரிவித்தார். மேலும் " 
நீதித்துறை சுதந்திரத்தை குறைக்கும் முயற்சியாக இந்த பாலியல் 
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அடுத்த வாரம் சில முக்கிய 
வழக்குகளை நான் விசாரிக்க உள்ளதால் எனக்கு எதிராக குற்றம் 
சுமத்துகிறார்கள்.                
                 இதற்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. எனது 20 
ஆண்டு சேவையில், என் வங்கிக்கணக்கில் ரூ. 6 லட்சம் பணம் மற்றும் பிஎஃப் 
கணக்கில் 40 லட்சம் உள்ளது. எனவே பணத்தை வைத்து என்னை யாரும் குறை கூற 
முடியாது. அதனால் அவர்கள் வேறு வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். 
உச்சநீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்களையும் நான் மரியாதையுடன் தான் 
நடத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
 

 
No comments:
Post a Comment