தன் மீது கொலைப்பழி விழுந்தபோதும் சசிகலா வீடியோவை வெளியிடவில்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் கொடுக்குமாறு சசிகலா
ஒப்படைத்த வீடியோவை எப்படி வெற்றிவேல் வெளியிட்டார்? அவருக்கு யார் அனுமதி
கொடுத்தது? என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா அடுக்கடுக்கான கேள்விகளை
எழுப்பி உள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்படும் வீடியோ காட்சிகளை இன்று டிடிவி.தினகரனின் ஆதரவாளர்
வெற்றிவேல் வெளியிட்டார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா பேட்டி:
"டிடிவி
தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ எப்படி வெற்றிவேலிடம் சென்றது.
வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார். உண்மையான அம்மாவின் தொண்டர்
என்று சொல்கிறார். அப்படி தொண்டனாக இருந்தால் இப்படி ஓர் உடையில் ஜெயலலிதா
படத்தை வெளியிட வேண்டும் என்றால் சசிகலாவே அதை செய்திருப்பார். வீடியோவை
வெளியிட வெற்றிவேல் யார்.
அதை செய்துவிட்டு கொஞ்சமும் கவலையில்லாமல் பேசுவது இன்னும் கவலையாக இருக்கிறது.
இவ்வளவு
பழி போடுகிறார்களே வீடியோ இருந்தால் வெளியிடலாமே என்று கேட்டபோது மிஞ்சி
மிஞ்சி போனால் என்னை கொலைகாரி என்று தானே சொல்வார்கள். ஜெயலலிதாவின்
கவுரவம் தான் முக்கியம், அதை இழக்க வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
சசிகலாவின் மனநிலையை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.
வெற்றிவேல்
நம்பிக்கை துரோகம் செய்துள்ளார், பெரிய தவறு செய்துள்ளார். அவர் மேல்
டிடிவி பெரிய அளவில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் ஜெயலலிதாவை
மட்டும் அசிங்கப்படுத்தவில்லை, சசிகலாவின் வார்த்தைகளையும்
அசிங்கப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை வெளியாட்கள் எடுக்கவில்லை.
சசிகலாதான் எடுத்தார். தனக்கு பின்னால் என்ன மருத்துவ உபகரணங்கள் இருந்தது
என்பதைப் பார்க்க ஜெயலலிதாவே வீடியோ எடுக்கச் சொன்னார். அவர் சொன்னதின்
பேரில்தான் சசிகலா இந்த வீடியோவை எடுத்தார். அது பொது வெளியில் வெளியிட
எடுக்கப்படவில்லை.
எப்போது எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது.
ஓரிரு மாதங்களுக்கு பின்னர் தான் எடுக்கப்பட்டது. இதை கொடுக்கச்சொன்னதற்கு
காரணமே விசாரணை கமிஷன் கேட்டால் கொடுக்கப்படத்தான் இந்த வீடியோவை
கொடுத்தோம். இல்லாவிட்டால் இந்த வீடியோ சசிகலாவிடம் மட்டுமே
இருந்திருக்கும்"
இவ்வாறு கிருஷ்ணப்பிரியா தெரிவித்தார்.

No comments:
Post a Comment