ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டாவுக்கே அதிக வாக்குகள்
கிடைத்துள்ளன. பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதில் நோட்டாவுக்கு 2,348 வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழக அரசியலில்
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்
டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234
வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என
1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5
சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி
பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக
வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின்
வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர்
கரு.நாகராஜ் 1,368 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 2,348 வாக்குகள்
கிடைத்தன.
பாஜக வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
நோட்டா என்பது என்ன?
தேர்தலில்
வேட்பாளர்கள் எவருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றால்
அதை தெரிவிப்பதற்காக வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா (None Of The
Above) என்ற பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. நோட்டா என்பதை முன்னர் 49 ஓ என
சுருக்கமாக குறிப்பிட்டு வந்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நோட்டா
என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment