எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுகதான் பொறுப்பு என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பேட்டியளித்தார். டெல்லியில் நிருபர்களுக்கு சசிகலா புஷ்பா கூறியதாவது: நேற்று காலை முதல் மாலை வரை நான் துன்புறுத்தப்பட்டேன். எனது செல்போனையும் பறித்துக் கொண்டனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. நேற்று சென்னையில், எனது வீட்டுக்கு செல்ல கூட அனுமதிக்கவில்லை.
எனவேதான், எனது எண்ணங்களை வெளியே தெரிவிக்க பிரஸ் மீட் கூட்ட முடியவில்லை. இதற்காகவே நாடாளுமன்றத்தில் வைத்து பேசினேன்.
நான் கஷ்டப்பட்டு இந்த பதவிக்கு வந்தேன். அவர்கள் கேட்டதும் திருப்பி தர முடியாது. எனவே நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இதுகுறித்து, எனது கணவரிடம் கூறியபோது, தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து வாழ முடியாது என கணவர் எச்சரித்தார். செரினா மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது, சசிகலா கணவரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்படியெல்லாம் பழி வாங்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், எனக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளேன். எந்த வகையில் ஆபத்து வரும் என்று தெரியாது. எனவேதான், நான், பாதுகாப்பு கேட்டு ராஜ்யசபாவில் பேசினேன். எனக்கோ, எனது கணவருக்கோ, எனது மகனுக்கோ ஆபத்து நேர்ந்தால், அதற்கு அதிமுகதான் பொறுப்பு. அதற்கு நாடாளுமன்றமும், மீடியாக்களும்தான் சாட்சி. நான் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ராஜ்யசபாவில் காங்கிரசும், திமுகவும் ஆதரவு அளித்தன. இதை நான்

No comments:
Post a Comment