ஆளுநர் ரோசையாவை இன்று மாலை சந்தித்து, திமுக தலைவர் கருணாநிதி மனு அளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர்-கருணாநிதி சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் ரோசையாவை இன்று மாலை 5.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
மழை வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, நிவாரண பணி முடக்கம் போன்றவை குறித்து கவர்னரிடம் கருணாநிதி மனு அளிப்பார் என்று கூறப்படுகிறது. ஆளுநர் ரோசய்யாவை கருணாநிதி சந்திக்க உள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment