மதுரை அருகே காதலிக்க மறுத்த இளம் பெண் மீது மிளகாய்பொடி வீசிய 3 பேரே காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள ராஜமாநகரைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த தவம் என்ற 21 இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலை அந்த இளம் பெண் ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் தவம் மற்றும் அவரது அக்காள் கணவர் மணி மற்றும் அவரது உறவினர் மூர்த்தி ஆகிய 3 பேரும் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த தவம் உள்பட 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அந்த இளம் பெண் மீது வீசியுள்ளனர்.இதை தடுக்க வந்த அந்தப் பெண்ணின் பெரியம்மாளும் தாக்கப்பட்டார். மிளகாய்பொடி கண்ணில் விழுந்ததால் அந்தப் பெண் எரிச்சலால் துடித்துள்ளார்.
இது குறித்த அவனியாபுரம் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணின் மீது மிளகாய்பொடி தூவிய தவம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment