சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தொழில் படையின் பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ளது. இதனால் தகுந்த அடையாள அட்டை இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரார்கள் உயர்நீதிமன்றத்தில் 24 மணிநேரமும் மூன்று ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இதனையொட்டி உயர்நீதிமன்றத்திற்கும் அதன் அருகில் இருக்கும் பிற நீதிமன்றங்களுக்கும் இடையே தடுப்பு வேளி அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வரும் அனைவரும் தகுந்த அடையாள் அட்டையுடன் பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பரிசோதனைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.


No comments:
Post a Comment