தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியதால், தமிழக மக்களுக்கு வெகுவாக பரிட்சையமான, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்தார்.
பவானிசிங் குளறுபடி அரசு வக்கீலாக பவானிசிங் முறைப்படி ஆஜராகாவிட்டாலும் அவருக்கு வாதிட வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவின்பேரில் பவானிசிங் நீக்கப்பட்டார். ஆனால், அரசு தரப்பில் ஆச்சாரியா வாதிட எழுத்துப்பூர்வமாகவே வாய்ப்பு தரப்பட்டது.
ஜெ. விடுதலை இதனிடையே மே 11ம் தேதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்து குமாரசாமி தீர்ப்பளித்தார். கீழ் நீதிமன்ற தீர்ப்பில் இருந்து 100 சதவீதம் மாறுபட்ட தீர்ப்பாக இது இருந்ததால் நாடே திரும்பி பார்த்தது.
கணக்கில் தப்பு மேலும், வருவாய் மற்றும் செலவீனம் ஆகியவற்றுக்கு இடையே கணக்கீடு செய்வதில் பெரும் பிழை இருப்பதாகவும், தப்பான கணக்கீட்டின் அடிப்படையில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனால் மீண்டும் குமாரசாமி பெயர்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகிவந்தன.
ஜெ. பிறந்த ஊர்க்காரர் இந்நிலையில், இன்று 24ம் தேதி திங்கள்கிழமையுடன் குமாரசாமி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 61 வயதான குமாரசாமி, 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, பிறந்தார். நாளை அவரின் பிறந்த நாள் ஆகும். குமாரசாமியின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலுள்ள மளவள்ளி. ஜெயலலிதாவின் பிறந்த ஊரும் மண்டியா மாவட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மேல்கோட்டை என்ற ஊரில் பிறந்தார்.
12 வருட வக்கீல் அனுபவம் வழக்கறிஞராக 12 வருட காலம் பணியாற்றிய குமாரசாமி, 1995ம் ஆண்டு, நடைபெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, பெங்களூர் செஷன்ஸ் கோர்ட்டில் முதன்மை நீதிபதியாக 10 வருடங்கள் பணியாற்றினார். 2005, மார்ச் 7ம் தேதி, கர்நாடக ஹைகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் பெற்றார். 2007 மார்ச் 1ம்தேதி, ஹைகோர்ட் நிரந்தர நீதிபதியானார்.
தொடர் பணி இந்நிலையில்தான், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஹைகோர்ட் தலைமை நீதிபதி குமாரசாமிக்கு வழங்கினார். கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் ஜெயலலிதா வழக்கை குமாரசாமி விசாரிக்க தொடங்கினார். அரசு விடுமுறைகளை தவிர்த்து, தொடர்ச்சியாக 41 நாட்கள் குமாரசாமி விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment