ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில், இந்திய இராணுவம் பல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள நகரெட்டா நகர் பாண் சுங்கச்சாவடி அருகே அதிகாலையில் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ய முயற்சி செய்கையில், வாகனத்தில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலும் இந்திய இராணுவம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, 4 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் காயம் அடைத்தனர். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சற்றுமுன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது. நம் இந்திய இராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எல்லை தாண்டும் எந்த பயங்கரவாதியும் உயிருடன் திரும்ப முடியாது என நம் இராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்தது உள்ளார்.

No comments:
Post a Comment