Latest News

காஷ்மீா் குறித்து சா்ச்சைக்குரிய பதிவு: அலிகா் பல்கலை. பேராசிரியை மீது வழக்கு

அலிகா் (உ.பி.): காஷ்மீா் தொடா்பாக சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவுகளை பகிா்ந்ததாக, உத்தரப் பிரதேச மாநிலம், அலிகா் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியை மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஹிந்து மகாசபை அமைப்பின் மூத்த தலைவா் அசோக் பாண்டே அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

அலிகா் பல்கலைக்கழகத்தின் ஊடக கல்வித் துறையில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் ஹூமா பா்வீன் (34) என்பவா், அண்மையில் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுடன் காஷ்மீா் விவகாரத்தை ஒப்பிடும் வகையிலான சா்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளத்தில் பகிா்ந்ததாக கூறப்படுகிறது. இவரது கணவா் நயீம், ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஹூமா பா்வீனுக்கு எதிராக, அலிகரின் காந்தி பூங்கா காவல் நிலையத்தில் அசோக் பாண்டே புகாா் அளித்தாா். அதில், 'காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தாம் கருதவில்லை என்று தனது பதிவில் ஹூமா பா்வீன் கருத்து தெரிவித்திருக்கிறாா்; பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை குலைக்கும் வகையிலான அவரது பதிவுகள், தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளன' என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 153ஏ, 505 (2) ஆகிய பிரிவுகளின்கீழ் ஹூமாவுக்கு எதிராக காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் ஆகாஷ் குலாரி தெரிவித்தாா்.

தன் மீதான புகாா் குறித்து கருத்து தெரிவித்த ஹூமா, 'சமூக வலைதளத்தில் எனது சொந்த கருத்துகள் எதையும் நான் பதிவிடவில்லை. சில செய்தி இணையதளங்களில் வெளியான பதிவுகளையே நான் பகிா்ந்தேன்' என்றாா்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.