Latest News

ராம்குமார் தற்கொலை .. சிபிஐ விசாரணை வேண்டும்… திருமாவளவன் கோரிக்கை

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் எழுந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 24 ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஐடி பொறியாளர் சுவாமி கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஜுலை 1ம் தேதி ராம்குமார் நெல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விதமே பல்வேறு சந்தேகங்களை பலருக்கு உருவாக்கி இருந்தது. தொடக்கத்தில் இருந்தே ராம்குமார் கைது பற்றியும் சுவாதி கொலை பற்றியும் பல்வேறு சந்தேகத்தை ஆழமாக எழுப்பி வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்நிலையில், இந்த தற்கொலை பற்றி திருமாவளவன் கூறியிருப்பதாவது: இந்தக் கொலை குறித்து தொடக்கத்தில் இருந்தே நான் சந்தேகம் எழுப்பி வந்திருக்கிறேன். இப்போது ராம்குமார் மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று தகவல் வெளியான சற்று நேரத்திற்கெல்லாம் ராம்குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனால், இந்த தற்கொலையில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.