
திருப்பூர் குமார் நகர் வலையங்காடு
வ.உ.சி. நகரை சேர்ந்த விஜய் என்பவரது மனைவி தீபா, தனது கணவர் பிறந்த
நாளுக்கு அவருக்கு தெரியாமல் சர்ப்ரைசாக இரு சக்கர வாகனம் பரிசு வழங்க
முடிவு செய்துள்ளார். இதனால் ஓ.எல்.எக்ஸ் இரு சக்கர வாகன விற்பனை இணைய
தளத்தில் பதிவு செய்து, அதில் இருந்த வாகனத்தை தேர்வு செய்தார். பின் அதில்
உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அந்த நபர்
கூறிய படி முதல் கட்டமாக ரூ. 24 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் இருசக்கர வாகனத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று தீபா
கூறியபோது, அவர் முழு தொகையையும் செலுத்த கூறியுள்ளார். இதனால்
சந்தேகமடைந்த தீபா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த
அவர், இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment