மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லி பல்கலைக்கழக
பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள்
தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி பல்கலை கழகத்தை சேர்ந்த ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில
பேராசிரியராக இருந்தவர் ஜி.என். சாய்பாபா. இவர் தடை செய்யப்பட்ட மவோயிஸ்ட்
அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் கட்சிரோலி போலீசார்,
பல்கலை கழகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலக இல்லத்தில் வைத்து சாய்பாபாவை
கைது செய்தனர். இதனை தொடர்ந்து பல்கலை கழகத்தில் இருந்து அவர் சஸ்பெண்டு
செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கட்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில், சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுடன்
தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர் ஹேம்
மிஷ்ரா, முன்னாள் பத்திரிக்கையாளரான பிரசாந்த் ராஹி மற்றும் 3 பேருக்கு
எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment