பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த
நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய தினம் இரவு
தங்களிடம் இருந்த பணத்தை வைத்து பலரும்,தங்கம், வைரம், விலை உயர்ந்த
புடவைகளாக வாங்கி குவித்தனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள நகைக் கடைகளில் திடீரென தங்கம் விற்பனை
அதிகரித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, தங்கத்தை வாங்கி குவிப்பதாக
புகார் எழுந்தது. இதையடுத்து பாரிமுனையில் உள்ள நகை கடைகளில் வருமான
வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் வருமான வரித்துறை
அதிகாரிகள் இது போன்ற சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில், இரானி என்ற நகைக் கடை
வியாபாரி வீடு மற்றும்நகை கடைகளில, இன்று வருமானவரித்துறையினர் சோதனை
நடத்தினர். அப்போது, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை,
அவர்கள் கண்டெடுத்தனர். அந்த நகைக்கடையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று
வருகிறது.


No comments:
Post a Comment