Latest News

மதுரையில் 11 குண்டுகள் கண்டெடுப்பு: ரவுடி வரிச்சியூர் செல்வம் புகைப்படம் இணைப்பு !!


மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் கிடந்த சிவப்பு நிற பையை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தியதில் அதில் 11 வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பாக எடுத்து சென்று செயலிழக்க செய்தனர். இந்த குண்டுகளை மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரவுடி கீரிமணி என்பவர் போட்டு சென்ற தாக விசாரணையில் தெரிய வந்தது.

கீரிமணி பிரபல ரவுடி அப்பள ராஜாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். அப்பள ராஜா தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரது இன்னொரு கூட்டாளியான பிரவீன் உள்ளிட்ட 4 பேர் சில நாட்களுக்கு முன்பு ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளுடன் சென்னை யில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய வரிச்சியூர் செல்வம் கேட்டதாக 20 வெடிகுண்டு களை கீரிமணி மூலம் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரை போலீசார் கீரிமணியை கண்காணித்தனர். இந்த நிலையில் குப்பைதொட்டியில் 11 குண்டுகள் சிக்கின. இந்த குண்டுகள் கீரிமணி வீசி இருக்கலாம் என்று போலீ சார் தெரிவித்த னர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வம், கீரிமணி ஆகியோரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் தனது வக்கீல்களூடன் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.